பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் - இரு பிள்ளைகளின் சடலங்களை மீட்க தொடர்ச்சியாக நடவடிக்கை
கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் தாயொருவர் கிணற்றில் குதித்த சம்பவத்தில் ஏற்கனவே ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஏனைய இரு பிள்ளைகளினதும் சடலங்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளுடன் தாயாயொருவர் கிணற்றுக்குள் குதித்த நிலையில் தாயார் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஏனைய இரு இருவரினதும் சடலங்களை மீட்க நேற்று மாலை முதல் கிணற்றுக்குள் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இரு சடலங்களும் கிணற்றுக்குள் இருப்பது அவதானிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட போதும் அதனை மீட்க முடியவில்லை எனவும், இன்று நீதிமன்ற அனுமதியுடன் அதனை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
