மாமியார் படுகொலை: மருமகன் தலைமறைவு
பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (08.04.2023) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் வசித்து வந்த 59 வயதுடைய பெண்ணே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மருமகனால் தாக்கப்பட்டு படுகொலை
கணவன் மற்றும் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பெண் மருமகனால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெண் இரத்தக்காயங்களுடன் மீட்கப்பட்டு பொல்பித்திகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்தேகநபர் தலைமறைவு
பெண்ணின் கணவரும் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
