அன்னை பூபதியின் நினைவு தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வு
இந்திய இராணுவத்தினை இலங்கையிலிருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவுதினம் வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த 1520 நாட்களாகச் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வு அவர்களது போராட்ட கொட்டகையினுள் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவரது திருவுருவப் படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் அமைதி மற்றும் உண்மையான ஜனநாயகம் வரவேண்டும் என்பதே அன்னை பூபதியின் வேண்டுகோள், அவரது விருப்பத்தை அடைவதற்கு எங்களுக்கு அமெரிக்காவே தேவை எனத் தெரிவித்துள்ளனர்.









19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri