மகளின் சீரழிவுக்கு உதவிய தாய் கைது
பாடசாலை மாணவியான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொல்கஹாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொல்கஹாவல பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான சிறுமியை இரண்டு பேர் பொல்கஹாவல நகரில் உள்ள இரண்டு தங்கும் விடுதிகளில் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த நபர்கள் பல முறை சிறுமியை இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். தங்கும் விடுதிகளுக்குள் செல்ல சிறுமி வேறு ஒரு பெண்ணின் அடையாள அட்டையை விடுதி நிர்வாகத்தினரிடம் காட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டாவது காதலனான திருமணமான நபர் தப்பியோட்டம்

இந்த சிறுமி முதலில் மாணவர் படை பயிற்சியாளர் ஒருவரை காதலித்துள்ளதுடன் அந்த காதல் முறிவடைந்த பின்னர், முகநூலில் பொல்கஹாவல ஆரகொட பிரதேசத்தை சேர்ந்த திருமணமான ஒருவருடன் அறிமுகமாகி அவருடன் இரண்டாவது காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
சிறுமியின் காதலுக்கு உடந்தையாக இருந்தமை சம்பந்தமாக சிறுமியின் தாய், சிறுமியின் முன்னாள் காதலன், மற்றும், தங்குமிட விடுதியில் அறை வழங்கியமை தொடர்பாக விடுதியின் ஊழியரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முதல் காதலன் பொல்கஹாவல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய இரண்டு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது காதலன் எனக்கூறப்படும் திருமணமான நபர் தப்பிச் சென்றுள்ளதுடன் அந்த நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam