சிறையிலுள்ள மகனுக்காக மோசமான செயற்பட்ட தாய்
போதைப்பொருள் குற்றச்சாட்டில் காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு, பாண் ஒன்றினுள் மறைத்து வைத்து கையடக்க தொலைபேசி மற்றும் போதைப்பொருட்களை வழங்க முயன்ற தாய், சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை அக்மீமன பகுதியை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் சிறையிலுள்ள தனது மகனைப் பார்ப்பதற்காக சந்தேக நபரான தாய் அன்று மாலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். இதன்போது மகனுக்கு வழங்குவதற்காக ஒரு பாண் துண்டை எடுத்துச் சென்றுள்ளார்.
கையடக்க தொலைபபேசி
அறையில் வைத்து சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பாண் துண்டினைப் பரிசோதித்தபோது, அதற்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கையடக்க தொலைபபேசி மற்றும் ஒரு சிறிய போதைப்பொருள் பொதி என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளால் உடனடியாகக் கைது செய்யப்பட்ட குறித்த பெண், மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபரான தாய் நேற்று காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri