கினிகத்தேனை பகுதியில் தாயும் மகளும் சடலமாக மீட்பு
கினிகத்தேனை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் (09.02.2023) குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலஸார் தெரிவித்துள்ளனர்.
கினிகத்தேனை- பேரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய தாயும் 30 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து சில நாட்களாக எவரும் வெளியே வராமை மற்றும் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக பிரதேசவாசிகள் கினிகத்தேனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
இதனையடுத்து, பொலிஸார் குறித்த வீட்டை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த போது, தாயும் மகளும் சடலங்களா கட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவனும் மகனும் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் பொலஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
