தேசிய பூங்காக்களில் குவியும் வெளிநாட்டவர்கள் : மூன்று மாதங்களுக்குள் பாரிய வருமானம்
2024ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 200,000 இற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்பார்க்கப்படும் வருமானம்
இதற்கமைய, கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் பெறக்கூடிய வருமானம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வருடத்தில் 686,321 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்போது, குறிப்பாக 100,000இற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால தேசிய பூங்காவினை (Yala National Park ) பார்வையிட்டுள்ளனர்.
மேலும், வஸ்கமுவ(Wasgamuwa), குமண(Kumana), வில்பத்துவ (Wilpattu), புந்தல(Bundala), உடவலவ(Udawalawa), மின்னேரியா(Minneriya), கௌதுல்ல (Cautula) போன்ற தேசிய பூங்காக்களுக்கும் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும், 106,004 பேர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |