அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறி அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல், பதாகைகள், சட்டவிரோத ஊர்வலங்கள் (துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதற்காக குழுக்களாக பயணம் செய்தல்), வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக பணிநீக்கம் செய்தல் போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் தேர்தல் பணிகளுக்கு அரச வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை பயன்படுத்துதல், அரசு அதிகாரிகள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற முறைப்பாடுகளும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

தேர்தல் சட்ட மீறல்கள்
கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் இதுவரை 2,200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
2100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை. தேர்தல் வன்முறைகள் தொடர்பான 11 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில் தமது அமைப்புக்கு கிடைத்த தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 300 முறைப்பாடுகளில் 210 முறைப்பாடுகள் அரசாங்க சொத்துக்களை முறைகேடாக அபகரித்தமை தொடர்பானவை என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் அல்லது தேர்தல் அலுவலக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யலாம் என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri