சிறையில் உள்ள மதகுருமார்களில் பெரும்பாலானோர் பௌத்த பிக்குகளே : அனுராத ஜயரத்ன
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதகுருமார்களில் பெரும்பாலானோர் பௌத்த பிக்குகள் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன நேற்று (08.08.2023) இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஜூன் முதலாம் திகதி, 29 பௌத்த பிக்குகள் கைதிகளாகவும், 19 பேர் சந்தேகத்திற்குரியவர்களாகவும் சிறைவாசம் அனுபவிப்பதாக, நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள்
அவர்கள் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பாலியல் வன்புணர்வுடன் தொடர்புபட்டுள்ளன.
மேலும், அவர்கள் மீது சிறுவர் பாலியல் வன்புணர்வு, பெண் பாலியல் வன்புணர்வு, கொலை, பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவல்களுக்கு அமைய இந்த குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதகுருமார்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக அறியமுடிகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




