இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை விளக்கீடு
இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை விளக்கீடு இன்றாகும்.
இந்தநிலையில், நேற்றைய தினம்(3) குமராலய தீபம் நாளை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெக்கப்பட்டன.
விசேடமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டுவரவும் மீண்டும் ஒரு இயற்னை அனர்த்தம் ஏற்படாதிருக்கவும் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் இதன்போது விசேட பிரார்த்தனைகள் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விளக்கீடு
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நேற்று இரவு குமராலய தீபத்திருநாள் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.

ஆலயம் முழவதும் தீபங்கள் ஏற்றப்பட்டு முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது சுவாமி உள்வீதியுலா நடைபெற்றதுடன் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டு வழிபாடுகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டன.
முல்லைத்தீவு
இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை விளக்கீடு முல்லைத்தீவில் சிறப்பாக இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.

இந்தநிலையில்,
இன்றையதினம் (4) வீடுகளில் கார்த்திகை விளக்கீடு இடம்பெற்றிருந்தது.
விசேடமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து
மீண்டுவரவும் மீண்டும் ஒரு இயற்னை அனர்த்தம் ஏற்படாதிருக்கவும் உயிர்
நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் விசேட பிரார்த்தனைகள் செய்து வீடுகளில்
கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்-சான்






ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri