மட்டக்களப்பில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் தொடர்ந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றனர்.
பெரியகல்லாறு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 22பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் குறித்த பகுதியில் 94பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளிலேயே குறித்த 22 தொற்றாளர்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
பெரியகல்லாறு 02ஆம், 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு அன்டிஜன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 211பேர் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 03மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன்
தெரிவித்துள்ளார்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 14 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan