அணுவாயுதக் கொள்கை ஆவணத்தை மாற்ற முனையும் ரஷ்யா
ரஷ்யாவுக்கு எதிராக மிரட்டல்கள் அதிகரித்தால், அதன் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கான நேரத்தை மாஸ்கோ மாற்றக்கூடும் என்று ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அன்ட்ரெய் கர்டாபொலொவ் கூறியதாக ‘ஆர்ஐஏ’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ அதன் அணுவாயுதக் கொள்கை ஆவணத்தை மாற்றக்கூடும் என்று அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்த முன்னாள் ஜெனரலின் கருத்துகள் வந்துள்ளன.
“சவால்களும் மிரட்டல்களும் அதிகரிப்பதை உணர்ந்தால், அணுவாயதங்களைப் பயன்படுத்தும் நேரம், அதன் தொடர்பிலான முடிவுகள் குறித்து நாம் கொள்கை ஆவணத்தில் திருத்தங்களைச் செய்யலாம்,” என்றும் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

“இருப்பினும், குறிப்பிட்டு எதையும் சொல்வதற்கு இப்போது சரியான நேரம் அல்ல,” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி எப்போது அணுவாயுதத்தைப் பயன்படுத்தலாம் என்பதை ரஷ்யாவின் 2020ஆம் ஆண்டு அணுவாயுதக் கொள்கை ஆவணம் விளக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri