அராலியில் மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வள்ளியம்மை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீட்டு காணி ஒன்றில் துருப்பிடித்த நிலையிலான மோட்டார் குண்டு ஒன்று இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடானது சில வருடங்களுக்கு முன்னர் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை ஜே/160 கிராம சேவகர் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதி
இந்நிலையில் குறித்த காணியின் உரிமையாளரால் குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் குறித்த குண்டினை
மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.