பலதார மணசட்டம்! அலி சப்ரியின் திருத்தங்கள் குறித்து அமைச்சரவையின் முடிவு - செய்திகளின் தொகுப்பு (Video)
இஸ்லாத்தில் நிலவும் பலதார மணம் தொடர்பான நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பலதார மணச் சட்டத்தில் திருத்தம் செய்ய நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் நீதியமைச்சர் அலி சப்ரியிடம் சிங்கள ஊடகம் ஒன்று வினவிய போது, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு பலதார மணம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சில முஸ்லிம்கள் உரிய பொருளாதார நிலைமைகளை பூர்த்தி செய்யாமல் பலதார மணம் செய்வதன் காரணமாக பல சமூக பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாட்டில் உள்ள சில முஸ்லிம்கள் முறையான வருமானம், இருப்பிடம், சொத்துக்கள் இன்றி பல திருமணங்களைச் செய்து கொள்வதால், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கடுமையான பொருளாதார மற்றும் உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
