யாழ்ப்பாணத்து இளம்பெண்ணே மன்னாரில் சடலமாக மீட்பு: நடந்தது என்ன? செய்திகளின் தொகுப்பு
மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்கரைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கீர்த்தனா (வயது 22) என தெரிய வந்துள்ளதோடு, அவர் மன்னார் மூன்றாம் பிட்டிப் பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வந்த நிலையில், மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வந்துள்ள சந்தர்ப்பத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த யுவதியின் தந்தை சிறு வயதிலே மரணித்த நிலையில் தாயின் பராமரிப்பில் அந்த யுவதி மற்றும் இரு சகோதரர்களும் இருந்து வந்துள்ளனர்.
இந்த செய்தியின் விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,



