ஒரு இலட்சத்தையும் தாண்டிய யுக்திய கைதுகள்
பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4,472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கையின் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் இதுவரையான காலப்பகுதிக்குள் 41 கிலோ ஹெரோயின், 43 கிலோ ஐஸ் போதைப்பொருள், 3 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 1,500 மில்லியன் ரூபா சட்டவிரோத சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான சோதனைகள்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸாரின் யுக்திய விசேட சோதனை நடவடிக்கை, ஆறுமாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |