இரண்டு வாரங்களில் 900ற்கும் மேற்பட்ட நில அதிர்வுகள்! ஜப்பான் ஊடகங்கள் செய்தி
தெற்கு ஜப்பானில் இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் உள்ள தீவு தொடர் பகுதிகளிலே இவ்வாறான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் மக்கள் தொகை குறைவாக வாழ்வதால் மக்கள் பதட்டமாகவும், இரவு முழுவதும் விழித்திருக்கவும் நேரிட்டுள்ளது.
நில அதிர்வு
இதன்படி டோகாரா தீவுகளைச் சுற்றியுள்ள கடல்களில் நில அதிர்வு ஜூன் 21 முதல் "அதிக சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அது புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
எனினும், ஜப்பான் தரப்பில் இருச்து சேதம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும், ஆனால் மக்களை வெளியேறத் தயாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
