காட்டுத்தீயை பரப்பிய 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
கடந்த ஆண்டு சிரியாவில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ 3 மாகாணங்களுக்கு பரவிய நிலையில், பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 187 காட்டுத்தீ சம்பவத்தில் 280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் என்பன பாதிக்கப்பட்டன.
இந்த காட்டுத்தீயினால் 32 ஆயிரம் ஏக்கர் காட்டில் உள்ள விவசாய நிலம் அழிந்திருந்ததுடன், மேலும் 370 வீடுகள் தீக்கிரையானதுடன், 3 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த காட்டுத்தீ திட்டமிட்டு நடத்தப்பட்டதென அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காட்டுத்தீயை வேண்டுமென்றே பரப்பிய 24 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் 24 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,
சர்வதேச அரசியலில் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடர் கதைதான்... 53 நிமிடங்கள் முன்
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri