இலங்கை முழுவதும் 7 நாட்களில் மூவாயிரத்துக்கு அதிகமானோர் கைது
இலங்கையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 29 ஆம் திகதி முதல் இந்த மாதம் (செப்டெம்பர்) 4ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3 ஆயிரத்து 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1011 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 972 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 28 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 913 பேரும், கஞ்சா செடிகளுடன் 29 பேரும், போதை மாத்திரைகளுடன் 59 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒரு கிலோ 907 கிராம் 606 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், ஒரு கிலோ 856 கிராம் 529 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஒரு கிலோ 342 கிராம் 62 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், ஆயிரத்து 59 கிலோ 899 கிராம் 634 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளும், 6 ஆயிரத்து 733 போதை மாத்திரைகளும், 4 ஆயிரத்து 53 சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



