யாழில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல்
யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை
இதன்போது, கடற்றொழில் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
பருத்தித்துறை பொலிஸ் தலைமை அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக வருகைதந்து குறித்த விடயத்தை ஆராய்ந்ததுடன், கைப்பற்றப்பட்ட பொருட்களை இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெருந்தொகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 3 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
