மருத்துவமனை மேற்கூரையில் 200 க்கும் மேற்பட்ட அழுகிய சடலங்கள் கண்டுபிடிப்பு!
மருத்துவமனை மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற பகுதி உள்ளது. இங்கு நிஸ்தார் என்ற மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகின்றது.
இந்த மருத்துவமனையின் மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் இருப்பதாக அந்நாட்டின் முதல்வருக்கு தகவல் கிடைத்துள்ளது.
வைத்தியசாலையில் விசாரணை
இதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முதல்வரின் ஆலோசகரான தாரிக் ஜமான் குஜார் என்பவர் சோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதன்போது மருத்துவமனை நிர்வாகத்திடம் சடலங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் ஆலோசகரின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைக்காததை தொடர்ந்து மருத்துவமனையின் பிணவறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் பிணவறை உள்ளே செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் மிரட்டிய பிறகே சோதனை மேற்கொள்ள வந்தவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
இதன்பின்னர் அவர் பிணவறைக்கு மேல் இருக்கும் மாடியை சோதனை செய்தபோது அங்கே சில பிணங்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் முதல்வரின் ஆலோசகரான தாரிக் ஜமான் குஜார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
சோதனை முடிவு
அவர் கூறுகையில்"இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறையில் 200-க்கும் மேற்பட்ட அழுகிய உடல்களை பற்றி எங்களுக்கு புகார்கள் வந்தது. இதனால் நாங்கள் சோதனை மேற்கொள்ள இங்கு வந்தோம்.
ஆனால் பிணவறையை கூட சோதனை செய்ய அங்கிருக்கும் ஊழியர்கள் முதலில் மறுத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறிய பிறகே பிணவறையை காட்டினர்.
இதையடுத்து மாடியில் சென்று பார்க்கையில் அங்கு ஆண்கள் , பெண்கள் என அழுகிய நிலையில் சடலங்களை கண்டோம். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ´உடல்களை விற்கிறீர்களா?´ என்று கேட்டபோது அதற்கு மறுத்தனர்.
மருத்துவ கல்வி தேவை
மேலும் இந்த உடல்கள் அனைத்தும் மருத்துவ படிப்புக்காக, மாணவர்களின் ஆய்வுக்காக உடல்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
இருப்பினும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஏனென்றால் அந்த உடல்கள் அனைத்தும் புழுக்களுக்கு அரித்துக் கொண்டிருக்கின்றன.
மருத்துவ கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்த உடல்கள் முறையாக அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்படி கிடப்பில் போடப்பட்டது ஏன் என்ற கேள்வி இருக்கிறது. இது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும்"என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பஞ்சாப் மாகாண முதல்வர் பர்வேஸ் இலாகி, பஞ்சாப் சிறப்பு சுகாதார மருத்துவ கல்வி செயலாளரிடம் இது குறித்து விளக்கம் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து நிஸ்தார் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.





சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய நாடுகள் News Lankasri
