துறைமுகங்களில் சிக்கிய 10,000இற்கும் மேற்பட்ட வாகனங்கள்
அனுமதி தாமதங்கள் மற்றும் ஆவண சிக்கல்கள் காரணமாக 10,000இற்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கை துறைமுகங்களில் சிக்கியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 45 நாட்களுக்குள் சுமார் 8,700 வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே கூறியுள்ளார்.
கடந்த 18ஆம் திகதியன்று சுங்கம் சுமார் 2,000 வாகனங்களை அனுமதித்த போதிலும், சுமார் 5,000 வாகனங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.
பொதுமக்களுக்கு சுமை
மேலும் 5,000 வாகனங்கள் விரைவில் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைமை தொடர்ந்தால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஏற்றுமதி செய்வதை ஜப்பானிய சரக்கு சேவைகள் நிறுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அதிகரிக்கும் தாமதச் செலவுகள் இறுதியில் பொதுமக்களுக்கு சுமையாக மாறக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
