அதிகமான தொற்றாளர்கள் கம்பஹாவில் அடையாளம்
இலங்கையில் நேற்று கண்டறியப்பட்ட கோவிட் தொற்றாளிகளில் அதிகமானோர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாத்திரம் நாட்டில் 2,845 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
இதில் 654பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள். 646பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள். களுத்துறையில் 281பேரும், கண்டியில் 114 பேரும் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் 148 பேரும், மட்டக்களப்பில் 121 பேரும் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.
இந்த எண்ணிக்கையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களும் அடங்குவதாகத் தேசிய கோவிட் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
அத்துடன் வெளிநாடுகளிலிருந்த வந்த 10க்கும் மேற்பட்டவர்களும் இந்த
எண்ணிக்கைக்குள் உள்ளடங்குவதாகத் தேசிய கோவிட் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.