கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள்
2024ஆம் ஆண்டு, விளையாட்டுகளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுக்கான அதிகமான முறைப்பாடுகள் கிரிக்கெட் தொடர்பாகவே பெறப்பட்டுள்ளதாக, விளையாட்டு குற்றச்செயல்கள் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதிகள், தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் (doping) பயன்படுத்தல் போன்ற காரணங்களுக்காக 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
2024ஆம் ஆண்டில் மொத்தமாக 27 விளையாட்டு குற்றச்செயல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை
இதில் கிரிக்கெட்டுடன், எல்லே, ஹாக்கி, ஜூடோ, மேசை பந்து, கபடி மற்றும் பட்மின்டன் போன்ற விளையாடுகளும் அடங்குகின்றன.
இவற்றில் பல புகார்கள், 2024 ஶ்ரீலங்கா பிரிமியர் லீக் மற்றும் லெஜெண்ட்ஸ் கப் போட்டிகளின் போது இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த விசாரணைப் பிரிவுக்கு மூன்று முறைப்பாடுகள் மட்டுமே கிடைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் 2024ஆம் ஆண்டு அதே காலப்பகுதியில் ஆறு முறைப்பாடுகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. விளையாட்டு குற்றச்செயல்கள் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவு, 2019 ஆம் ஆண்டு 24 இலக்க சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் நிறுவப்பட்டது.
இப்பிரிவு, போட்டிகள் வஞ்சனை, ஊழல், சட்டவிரோத சூதாட்டம் உள்ளிட்ட குற்றங்களை விசாரணை செய்வதுடன், விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செயற்படுகிறது.
தற்போது இந்த பிரிவுக்கு நிரந்தர இயக்குநர் ஒருவர் இல்லை என்பதும், அதனால் சில சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
