மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு எதிராக அதிகரித்துள்ள முறைப்பாடுகள்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்கார(Thisara Nanayakkara )மேற்கொண்ட நிதி மோசடி தொடர்பில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி மோசடி தொடர்பில் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி முறைப்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கத்தினூடாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
30 இலட்சம் ரூபா
இதற்கமைய 30 இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த (28) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் (06.01.2025) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan