மக்கள் அதிகளவில் நாட்டை விட்டு செல்வார்கள்! உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு மற்றும் நோபாளம் நாடுகளுக்கான பணிப்பாளர் பொரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடி நிலைமையானது தொடர்ந்தும் உக்கிரமடைந்தால், நாட்டு மக்கள் அதிகளவில் நாட்டை கைவிட்டு செல்வார்கள்.
பாடசாலை கல்வியை நிறுத்தி விடுவார்கள்

பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்கள் தமது பிள்ளைகளின் பாடசாலை கல்வியை நிறுத்தி விடுவார்கள்.
தமது வர்த்தகத்தை முன்னெடுக்கும் நோக்கில் நிறுவனங்கள் சொத்துக்களை விற்க நேரிடும்.
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் நீண்டகால வசதிகளை பெற்றுக்கொள்ள முடிந்தமை, தேசிய கடனை மறுசீரமைப்பதற்காக நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்டமை, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் சர்வதேச நிதியுதவியை பெற்றுக்கொள்ள முடிந்தமை போன்ற நிலைமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு வாழ்த்து கூறுகிறேன்.
சிறந்த பிரதிபலனை எதிர்பார்க்கும் பலமான மறுசீரமைப்பை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய கடினமான மற்றும் அத்தியாவசியமான மறுசீரமைப்பு அவசியம். இதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam