மொறவெவ பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி மொறவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று(17) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியாயமான வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்து, NPP அரசே இடமாற்றத்தில் இடம்பெறும் பாரபட்சங்களை நிறுத்து, அவசியம் இடமாற்றம் வேண்டும், வேலை கிடைத்தது முதல் ஓய்வு காலம் வரை இங்குதானா போன்ற பதாகைகளை ஏந்தி எவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பல வருட காலமாக மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர் இருக்கும் போது, சிலர் நகர் பகுதில் வேலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் இந்த இடமாற்றத்தினை நிறுத்தியுள்னர்.
இடமாற்றம் அவசியம்
முறையான நடைமுறைப்படுத்தபட்ட இடமாற்றம் அவசியம் தேவை என்று அனைத்து உத்தியோகத்தர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
