பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கூடுதல் புள்ளி
பல்கலைக்கழக நுழைவுக்கான புள்ளி வழங்கலின் போது அறநெறிப்பாடசாலை ஆசிரியர் பரீட்சையில் சித்திபெற்றவர்களுக்கு ஒரு புள்ளியைக் கூடுதலாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் தலைவர் பேராசிரியர் தும்புல்லே சீலக்கந்த நாயக்க தேரர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் நடைபெற்றுள்ளது.
அறநெறிப்பாடசாலை ஆசிரியர் பரீட்சை
இதன்போது இலங்கையில் அறநெறிப்பாடசாலைக் கல்வியை பரவலாக்குவது மற்றும் வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

அதன் ஒருகட்டமாக அறநெறிப்பாடசாலை ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பல்கலைக்கழக பிரவேசத்தின் போது கூடுதல் புள்ளியொன்றை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைக்கு அதுகுறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் ஊடாக கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri