இலங்கைக்கு உதவவுள்ள இந்திய பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு!
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, கடந்த வாரம் இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் (ஈஏசி-பிஎம்) கலாநிதி; பிபேக் டெப்ராய்யை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
புதுடில்லி இலங்கை உயர்ஸ்தானிகரம் இதனை தெரிவித்துள்ளது.
பொருளாதார ஆலோசனை
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு என்பது இந்திய அரசாங்கத்திற்கு, குறிப்பாக பிரதமருக்கு பொருளாதார மற்றும் தொடர்புடைய விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பாகும்.
இந்த கலந்துரையாடலின் போது, குழுவின் தலைவர் மொரகொடவிற்கு சபையின் ஆணை மற்றும் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை மொரகொட இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், அந்தச் செயற்பாட்டிற்கு சபை எவ்வாறு உதவ முடியும் என வினவியுள்ளார்.
கலந்துரையாடலுக்கு அழைப்பு
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாக, வசதியான திகதிகளில் கலந்துரையாட மொரகொடவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குலாநிதி பிபேக் டெப்ராய் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் மற்றும் இந்திய அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.
அவர் பகவத் கீதை உட்பட பல பண்டைய இந்திய கிளாசிக் புத்தகங்களை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்த ஒரு சிறந்த எழுத்தாளராவார் ஆவார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
