ஈராக் போராட்டத்தில்15 பேர் பலி: நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு
ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது சதரின் 15 ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சுமார் 350 எதிர்ப்பாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு
ஈராக்கின் காபந்து பிரதமர் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பல நகரங்களில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து இராணுவம் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையும் அறிவித்துள்ளது.
சமீப ஆண்டுகளில் ஈராக் தலைநகரைத் தாக்கிய மிக மோசமான வன்முறையாக இது பார்க்கப்படுகின்றது.
பெரும்பாலான சண்டைகள் நகரின் பசுமை மண்டலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவாகியுள்ளது.
முக்தாதா அல்-சதர்
ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அமெரிக்க-எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில், அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு இடையிலான முட்டுக்கட்டையால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்தும் கூட, ஈராக்கில் ஒரு சாதனையாக இன்னும் அரசாங்கம் இல்லாத நிலை உள்ளது.
ஈராக் நாடாளுமன்றத்தை கலைத்தல், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை அல்-சதர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,
போராட்டக்காரர்களின் வன்முறை மற்றும் ஆயுத பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறி அல் சதர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
