மாதாந்த வணக்க நிகழ்வு சித்திரை 2023 (Photos)
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதிக உச்ச தியாகங்களைக் கொண்ட சித்திரை மாதத்தின், நினைவு வணக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (30.04.2003 ) அன்று, உலகத் தமிழர் வரலாற்று மைய, மாவீரர் மண்டபத்தில், மாவீரர் பணிமனை ஏற்பாட்டில் மாலை 3.00 மணி அளவில் நடைபெற்றுள்ளது.
தமிழீழ போராட வரலாற்றின் சித்திரை மாதத்தின் முதல் மாவீரரான மூத்த உறுப்பினர் கப்டன்.லிங்கத்தின் நினைவுகளுடன், நாட்டுப் பற்றாளர் அன்னை பூபதி அம்மாவின் நினைவுடனான நாட்டுப் பற்றாளர் நாள், விடுதலைப் போராட்டத்தின் அதி உச்ச தியாகமாக அமைந்து ஆனந்தபுர வீர மறவர்களின் நினைவுகளுடன் இம்மாதத்தில் வீரச் சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் நாட்டுப் பற்றாளர்கள், மாமனிதர்களையும் இனவழிப்புக்குள்ளான மாவீரர்களை நினைவு கூர்ந்ததாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் பொதுச்சுடர்களை சுடர்வண்ணன், காருண்யா ஆகியோர் ஏற்றி வைக்க, தமிழீழ தேசியக் கொடியினை புரட்சி, கொடிப்பாடல் ஒலிக்க ஏற்றியுள்ளனர்.
மலர் வணக்கம்
தொடர்ந்து பொது மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச் சுடரினை சத்தியவாணி ஏற்றி வைக்க, விடுதலைப் போராட்டத்தின் நாட்டுப் பற்றாளர்களின் அடையாளமான அன்னை பூபதி அம்மாவின் திருவுருவப்படத்திற்கான ஈகை சுடரினை, சர்வா ஏற்ற, மலர் மாலையினை கஜேந்திரனின் சகோதரன் விக்னேஸ்வரன் அணிவித்துள்ளார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் வருகை தந்திருந்த உரித்துடையோர்கள் தமது உறவுகளின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரேற்றி மலர் வணக்கம் செய்துள்ளனர்.
பிரிகேடியர்.கடாபியுடைய திருவுருவப் படத்திற்கு அவரது துணைவியாரும், பிள்ளைகளும் வணக்கம் செய்துள்ளனர்.
பிரிகேடியர்.துர்கா, பிரிகேடியர்.விதுசா ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு அவர்களின் கட்டளையின் கீழ் களமாடிய பெண் போராளிகள் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்துள்ளனர்.
வரலாற்று நினைவு
பிரிகேடியர்.தீபன், பிரிகேடியர். மணிவண்ணன் கேணல்.நாகேஷ் கேணல்.வீரத்தேவன், லெப்.கேணல்.இளவாணன் ஆகிய மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு அவர்களுடன் களமாடிய போராளிகள் ஈகைச்சுடர், ஏற்றி மலர் வணக்கம் செய்துள்ளனர்.
தொடர்ந்து அங்கே வருகை தந்திருந்த உறவுகள் அனைவரும் அங்கிருந்து நூற்றுக்கணக்கான மாவீரர் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்துள்ளனர்.
நிகழ்வில் மாவீரர்களுக்கான நினைவுப் பாடலுக்கு நிறைய ரசி சோதிதாஸ் நடனமாடியுள்ளார்.
தியாகத்தின் உச்சத்தினை தொட்ட அனைத்து மாவீரர்களின் நினைவு சுமந்த கவிதையினை முகில் உணர்வுப்பூர்வமாக வழங்கியுள்ளார்.
எழுச்சி பாடல்களை மைக்கல் சுரேஸ் ஆகியோர் வழங்க, வரலாற்று நினைவு பேருரையினை புரட்சி வழங்கியுள்ளார்.
நம்பிக்கை பாடலுடன் தேசியக்கொடி கையேற்கப்பட்டது
ஆனந்தபுர கள நினைவுகளை 2009 காலப்பகுதியின் ஜெயந்தன் படையணியின் தளபதியும், தற்போதைய தமிழீழ அரசியல் துறையின் பொறுப்பாளருமாகிய ஜெயாத்தன் வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 18.05.2023 அன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மூன்றலில் நடைபெறவிருக்கும் இனவழிப்பு நாளுக்கான அறிவித்தலுடன் உறுதி ஏற்பு நடைபெற்றுள்ளது.
இறுதியில் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" எனும் நம்பிக்கை பாடலுடன் தேசியக்கொடி கையேற்கப்பட்டுள்ளது.
எப்போதும் போன்று வளாகத்தில் அமைந்துள்ள அற்புத விநாயகர் ஆலயத்திலும் மாவீரர்களுக்கும் இனவழிப்புக்கு உள்ளான மக்களுக்குமாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.



















நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
