பச்சிளைப்பள்ளியின் பிரதேச சபையின மாதாந்த அமர்வு
பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றய தினம்(13) திட்டமிட்ட நிலையில் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய சபை அமர்வில் பிரதானமாக சபையால் வழங்கப்படும் விசேட அனுமதி மற்றும் அனுமதி தொடர்பாக கலந்துரையாட பட்டு அனுமதிகளும் வழங்கப்பட்டது.
மற்றும் பளை நகரில் மணிக்கூட்டு கோபிரம் அமைத்தல் மற்றும் கோயில்களில் அர்ச்சனை தட்டுக்கு பயன்படுத்தப்படும் பிளாட்சிக் பொருட்களை தடை செய்தல் மற்றும் மற்றும் இயக்கச்சி தொடக்கம் முகமாலை வரை பிரதான வீதி அருகில் காணப்படும் பாவனையற்ற கட்டிடங்களை உரிமையாளருக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அவ் கட்டிடங்களை உடைத்தல் போன்ற தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது.
கலந்துரையாடல்
மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் பணிபுரியும் ஊழியர்களை புதுப்பித்தல் மற்றும் இயங்கு நிலையில் உள்ள பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு மானியம் வழங்குதல் மற்றும் ஆதன வரி தொடர்பாக கலந்துரையாடப்பட்டு ஆதன வரி வீதங்களும் நிறுவப்பட்டது.
அதன் அடிப்படையில் வீடுகள்,வெற்றுக்காணி, அரசாங்க கட்டிடங்கள் என்பவற்றுக்கு 4 வீதமும் மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கு 5வீதம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பிரதேச சபை எல்லைக்குள் தனிச்சு நிற்கும் வாகனங்களுக்கு வரி அறவிடுதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தண்டம் அறவிடல்
வீதியோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச சபையின் அனுமதியுடன் கால்நடைகளை பிடிச்சு வைத்தல் அதற்கான தண்டம் அறவிடல் இவ் திட்டத்தை உடனடியாக நடைமுறையில் கொண்டு வருதல் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய பிரதேச சபை அமர்வில் 13 உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
