11 இளைஞர்கள் கடத்திப் படுகொலை: கரன்னகொடவுக்குத் தண்டனை தேவை - பொன்சேகா வலியுறுத்தல்
மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படுகொலை செய்தமைக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு தடை
மேலும் தெரிவிக்கையில், வசந்த கரன்னகொட, சவேந்திர சில்வா போன்ற தளபதிகளுக்கு சர்வதேசத்தால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சரத் பொன்சேகாவுக்குத் தடைகள் விதிக்கப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளர் கூறியதை அவதானித்தேன்.
அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், அமெரிக்காவால் முதன்முதலில் எனக்குத்தான் தடைகள் விதிக்கப்பட்டன. இந்தத் தடைகள் காரணமாக, நான் இன்றளவும் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாது. ஆனால், ராஜபக்சக்களுக்குதான் தடைகள் இல்லை.

இழிவான செயல்கள்
அவர்கள் சுதந்திரமாக அமெரிக்காவுக்குச் சென்று வருகின்றனர். அத்துடன், கரன்னகொட போன்று இழிவான செயல்களில் நான் ஈடுபட்டதில்லை. மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படுகொலை செய்தது கரன்னகொட என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
எனவே, அத்தகைய நபர்களுக்கு பொருளாதாரத் தடைகள், பயணத் தடைகள் மட்டும் போதாது. அவர்கள் சிறைகளில் இருக்க வேண்டியவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam