பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு
கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேசசபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் சுகவீனம் காரணமாக வருகை தராத நிலையில் உப தவிசாளர் தலைமையில் ஆரம்பமானது.
அத்துடன் சபையால் வழங்கப்படும் விசேட அனுமதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நிலங்களுக்கு வரி
பச்சிளைப்பள்ளி பிரதேசசபைக்கு உட்பட்ட பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு 2 வீத வரி அறவிடுவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், அதனை மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்து உடனடியாக செயற்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பளை பொதுச் சந்தையில் காணப்படும் இடிப்பாட்டு கற்களை தேவையின் நிமித்தம் காணப்படும் வீதிகள் மற்றும் தேவையுடைய இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு அவ்விடங்களுக்கு வழங்குவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
திருத்த வேலைகளுக்கான கூலி
இதேவேளை வீதி விளக்குகள் திருத்தம் மற்றும் புதிதாக அமைப்பது தொடர்பான கூலி தொடர்பாக வாதபிரதிவாதம் இடம்பெற்றதுடன் இறுதியில் திருத்த வேலைக்கு 1000 ரூபா மற்றும் புதிதாக அமைப்பதற்கு 1050 ரூபா எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும், 2018ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கு வலுசேர்க்கும் முகமாக செம்மணி விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை கட்டாயம் வேண்டும் என பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், இவ்வலு சேர்க்கும் விடயத்தை 2018ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் இணைப்பது தொடர்பாக சபையில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா




