பிக்குகளின் திடுக்கிட வைக்கும் செயல்.. பேசுபொருளாகும் சூனிய பொம்மைகள்
கலகொட அத்தே ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை தொடர்ந்து, அவரின் காவி உடை அகற்றப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனை காரணம் காட்டி ஆட்சியை இழந்த பலர் அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்தனர். ஞானசாரரின் விவகாரத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தினர்.
இதற்கிடையில், அவரை விடுதலை செய்யவும், அவரின் காவி உடை அகற்றலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முந்தைய அரசாங்கங்களின் போது ராஜபக்ச தரப்புடன் நெருக்கமாக இருந்த சில பிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூனியம்
அவர்கள் ராஜபக்சக்களின் ஆதரவாளர்கள் தான் என பலரால் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர்களில் பலர் ராஜபக்சக்களின் தீவிர ஆதரவாளர்கள் என தெரிய வந்துள்ளது.
இவ்வாறிருக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்குகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சூனியம் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தசாசனத்தை பின்பற்றி வரும் மதகுருக்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளமை உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதுடன் கேலியான பல மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
மகிந்தவின் உயிரைப் பறிக்கும் பாரிய சதித் திட்டம்! நீதிமன்ற சாட்சியத்தை அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan