செம்மணி புதைகுழி விவகாரத்தில் தொடரும் ஊகம் - உண்மைகள் வெளிவர வலியுறுத்தும் டக்ளஸ் தரப்பு
செம்மணி புதைகுழி தொடர்பாக ஊகங்களை வெளியிட்டு அதனை பூசிமெழுகும் சூழலை உருவாக்க கூடாது எனவும் செம்மணி புதைகுழி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தற்துணிவோடு கரிசனை செலுத்த வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் இன்றையதினம்(21.10.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொற்று நோய் காரணமாக உயிரிழந்தவர்கள்
மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையில் பேராசிரியர் ராஜ் சோமதேவா, இயற்கை பேரிடர் காரணமாக அல்லது தொற்று நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் என்பு எச்சங்களாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார் இந்தக் கருத்தானது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக காணப்படுகின்றது.

இவ்வாறான கருத்துக்கள் செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பற்றிய வீரியத்தினை குறைத்து விடுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்துகின்றது.
அவ்வாறான ஒரு நிலை செம்மணி விவகாரத்திற்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதே எங்களுடைய அக்கறையாக இருக்கின்றது.
எங்களைப் பொறுத்தவரையில் ஊகத்தின் அடிப்படையில் எந்தவிதமான கருத்துக்களும் வெளிப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
பேராசிரியர் ராஜ் சோமதேவா தரப்பினர் ஊகிப்பது போன்ற வாய்ப்புக்கள் இருந்தாலும் அவை விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளிப்படுத்தப்பட வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரையில், 70, 80, 90ஆம் ஆண்டுகளிலே இந்த மண்ணிலே வாழ்ந்த தலைமுறையினர் தற்போதும் இந்த மண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
செம்மணி பற்றிய உண்மைகள்
இந்தக் காலப் பகுதியில் இந்த மண்ணில் பாரிய இயற்கை பேரிடர்களோ, நூற்றுக்காணக்கான உயிர்களை பலியெடுத்த தொற்று நோக்களோ இடம்பெற்றிருக்கவில்லை.
இவர்கள் கூறுவது போது இயற்கை பேரிடர் மற்றும் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றால், அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றவையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தாலும் அங்கு மீட்கபட்பட மனித எச்சங்கள் அனைத்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க முடியாது.
கணிசமானவை 90களுக்கு பிற்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவையாக இருப்பதற்கான வாய்ப்புக்ள் இருக்கின்றன. 96ஆம் ஆண்டு காலப் பகுதியிலே இந்தப் பகுதியிலே 850 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமால் போயிருக்கின்றார்கள் என்பதற்கு பதிவுகள் இருக்கின்றன.
அவ்வாறு, காணால்போனவர்களில் கணிசமானவர்களுக்கு என்ன நடந்து என்று தெரியாமல் அவர்களின் உறவுகள் இன்றும் இந்த மண்ணிலே துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே செம்மணி பற்றிய உண்மைகள் வெளிவர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan