குரங்கம்மை பரவல் அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்
குரங்கம்மை பரவல் அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலையை பிறப்பித்து ஆளுநர் கேவின் நியூசம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், குரங்கம்மை பரவலை தடுக்கவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நியூயார்க் மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கலிபோர்னியாவிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் இதுவரை 827 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க்கிற்கு அடுத்தபடியாக குரங்கம்மை பாதிப்பில் இரண்டாவது இடத்தில் கலிபோர்னியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,