சாதாரண தர மாணவர்களை கொடூரமாக தாக்கிய தேரர்!

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi May 06, 2024 03:44 AM GMT
Report

விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியை அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1343 சாதாரண தர மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளில் மாற்றம்

1343 சாதாரண தர மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளில் மாற்றம்


வைத்தியசாலையில் அனுமதி

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாதாரண தர மாணவர்களை கொடூரமாக தாக்கிய தேரர்! | Monk Brutally Attacked The Student

மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு குறித்த மாணவர்கள் சென்றுள்ளனர்.

அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்


தந்தையின் கருத்து

இது தொடர்பில் தாக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில், "இந்த தாக்குதலால் மகனின் உடலின் உள்பகுதி சேதமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர்.

அறுவை சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மகனுக்கு அடித்ததால் ஏற்பட்ட ரத்தக்காயம் இருப்பதாக மனைவி என்னிடம் கூறினார்.

சாதாரண தர மாணவர்களை கொடூரமாக தாக்கிய தேரர்! | Monk Brutally Attacked The Student

இது வீழ்ந்ததால் ஏற்பட்ட காயம் அல்ல தாக்கியதால் ஏற்பட்ட காயம் என மருத்துவர்களும் கூறினர். பின்னர், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.

அதன் பிறகு வெலிகம பொலிஸாருடன் விகாரைக்கு சென்றோம் அங்கு தேரர் இல்லை. மகனுக்கு இன்னும் சாப்பிடவும் குடிக்கவும் முடியவில்லை. 6ம் திகதி பரீட்சை. அதுக்கு செல்லவும் தற்போது வழியில்லை. உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா இருக்கிறான்.

மகன் தோழியுடன் சென்றமை குறித்து எங்களுக்கு அறிவித்திருக்கலாம், அதனை விடுத்து இவ்வாறு கொடூரமாக தாக்குவது முறையல்ல. எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தேரருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என கூறியுள்ளார்.

தொடரும் காசா போர் : சர்வதேச ஊடகத்துக்கு தடை விதித்த இஸ்ரேல்

தொடரும் காசா போர் : சர்வதேச ஊடகத்துக்கு தடை விதித்த இஸ்ரேல்


கடுமையான தாக்குதல்

இந்த விடயம் குறித்து தாக்கப்பட்ட மாணவி கூறும் போது, “இருவரும் விகாரைக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த தேரர் ஈர்க்குமாரை எடுத்து நண்பரை தாக்கினார். அவர் ஓடினார், நானும் ஓடினேன். ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம். நாங்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை, பின்னர் என்னையும் அழைத்து தாக்கினார்.'' என கூறியுள்ளார்.

சாதாரண தர மாணவர்களை கொடூரமாக தாக்கிய தேரர்! | Monk Brutally Attacked The Student

இவ்வருடம் சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த வெலிகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், கடந்த 25 ஆம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளான். ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.

அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US