வெள்ளை மாளிகையை பின்பற்றி கோட்டாபய வீணடித்த பெருந்தொகை பணம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட விசேட ஊடக மையத்திற்காக கிட்டத்தட்ட 75 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக மையம்
சுதேவ ஹெட்டியாராச்சி மற்றும் கிங்ஸ்லி ரத்நாயக்க ஆகியோர் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவில் இணைந்ததன் பின்னர், அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை ஊடக அறையின் மாதிரியை பின்பற்றி இந்த புதிய ஊடக மையம் உருவாக்கப்பட்டது.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி கட்டிடத்தின் தரை தளத்தில் இந்த ஊடக மையம் இயங்கி வந்ததுடன் ஒரே நேரத்தில் சுமார் நாற்பது பேர் பங்கேற்கும் அளவுக்கு இடவசதி இருந்தது.
ஜூலை 21, 2021 மற்றும் ஏப்ரல் 8, 2022 க்கு இடையில், தொடர்புடைய ஊடக மையம் செயலில் இருந்தது மற்றும் அங்கு நடைபெற்ற ஊடக சந்திப்புகளின் எண்ணிக்கை 24 ஆகும்.