ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபைக்கு திறைசேரியில் இருந்து ஒதுக்கப்படவுள்ள பணம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SLA) மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றுக்கு திறைசேரியில் இருந்து 238.9 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் தமது கடன்களை தீர்த்து, மறுசீரமைப்பு திட்டத்துக்கு தயாராகும் வகையிலேயே இந்த ஒதுக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
நிதி அமைச்சு இந்த கூடுதல் நிதி மதிப்பீட்டை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒதுக்கப்படும் நிதி விபரம்
இதில் மின்சார சபைக்கு 129 பில்லியன் ஒதுக்கப்படுவதுடன், தேசிய விமான சேவைக்கு 109.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான நீண்ட கலந்துரையாடலின் பின், ஹர்ஷ டி சில்வா தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) இந்த கூடுதல் மதிப்பீட்டை அண்மையில் அங்கீகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
