வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பணம் திருட்டு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் களவாடப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த வைத்தியசாலையில் பணிசெய்யும் தாதியர் ஒருவருடைய அறையில் வைக்கப்பட்டிருந்த தாதியருடைய பணம் மற்றும் வைத்தியசாலையின் பணம் என்பன இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலக
மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன்,
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
