மட்டக்களப்பில் வீடொன்றுக்குள் பாரிய கொள்ளை - வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெண் மீது தாக்குதல் மேற்கொண்டு பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லடி பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை வேளையில் புகுந்த கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியதாக தெரிய வந்துள்ளது.
வீட்டில் இருந்த 67 வயதான பெண் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் கைவரிசை
வெளிநாட்டிலிருந்து வந்த பெண் குறித்த வீட்டில் தனிமையில் இருந்தமையை அறிந்த கொண்ட கொள்ளையர்கள், ஜன்னல் கதவினை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சுமார் இரண்டரை கோடி ரூபா பணம் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri