யாழில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்திருந்த நபரொருவரிடம் பாரிய பணமோசடி! பலர் கைது

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Theepan Aug 27, 2025 04:19 PM GMT
Report

புதிய இணைப்பு

சுவிட்சர்லாந்தில் இருந்து  தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 03 பெண்களும் 2 ஆண்களையும் தேடி வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சுவிஸ் நாட்டவரிடம் திருடிய பணத்தில் , 75 இலட்ச ரூபாய் பணம் , 09 ஆயிரம் சுவிஸ் பிராங் , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்று , அதிநவீன கையடக்க தொலைபேசிகள் - 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்.செம்மணி புதைகுழியை பார்வையிட உள்ள ஜனாதிபதி அநுர

யாழ்.செம்மணி புதைகுழியை பார்வையிட உள்ள ஜனாதிபதி அநுர

தீவிர விசாரணை

சுவிஸ் நாட்டில் வேலையில் இருந்து ஓய்வு பெற்று , ஓய்வு கொடுப்பனவான பெருந்தொகை பணத்துடன், தாயகம் திரும்பி நெல்லியடி பகுதியில் பகுதியில் வயோதிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

யாழில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்திருந்த நபரொருவரிடம் பாரிய பணமோசடி! பலர் கைது | Money Laundering Jaffna 10 Suspects Arrested

அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணய தாள்கள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பணத்தினையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதனை அறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு வந்து செல்லும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விளக்கமறியல்

விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும் , தாம் பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக திருடி வந்ததாகவும் , அவற்றினை நண்பர்கள் , தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வெளிநாட்டு பணங்களை மாற்றி கொடுக்கும் நிலையத்தில் பணத்தினை மாற்றியதாகவும் கூறியுள்ளனர்.

யாழில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்திருந்த நபரொருவரிடம் பாரிய பணமோசடி! பலர் கைது | Money Laundering Jaffna 10 Suspects Arrested

அதன் அடிப்படையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை , திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 06 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம்(27) நீதிமன்றில் முற்படுத்திய வேளை 08 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம்- நெல்லியடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பெருந்தொகை பண மோசடியுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெல்லியடியில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்திருந்த நபரொருவரிடம் இருந்து, வெளிநாட்டு நாணயத் தாள்கள் உள்ளடங்கலாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபா வரை அண்மையில் மோசடி செய்யப்பட்டிருந்தன.

ரணிலின் கைது காரணமாக உயிரிழந்த பல்கலைக்கழக வேந்தர்! எழுந்துள்ள சர்ச்சை

ரணிலின் கைது காரணமாக உயிரிழந்த பல்கலைக்கழக வேந்தர்! எழுந்துள்ள சர்ச்சை

மேலதிக விசாரணைகள்

இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையிலேயே, சந்தேகநபர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்திருந்த நபரொருவரிடம் பாரிய பணமோசடி! பலர் கைது | Money Laundering Jaffna 10 Suspects Arrested

இந்தநிலையில், சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், குறித்த நபர்களிடமிருந்து ஒருதொகைப் பணம் மீட்கப்பட்டதுடன், எஞ்சிய பணத்தை மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிராமத்திற்குள் நுழைந்த 100 யானைகள்! கடும் அச்சத்தில் கிராம மக்கள்

கிராமத்திற்குள் நுழைந்த 100 யானைகள்! கடும் அச்சத்தில் கிராம மக்கள்

ரணிலிடம் 80 கோடி வாங்கி மதுபானம் விநியோகம் செய்த தமிழரசுகட்சி எம்பி

ரணிலிடம் 80 கோடி வாங்கி மதுபானம் விநியோகம் செய்த தமிழரசுகட்சி எம்பி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US