பெருந்தொகை பணமோசடி வழக்கில் சிக்கிய பெண் தொழிலதிபர்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
கோடீஸ்வர தொழிலதிபர்களின் தொழில்களில் முதலீடு செய்வதாக வாக்குறுதியளித்து அவர்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, பிணையில் வெளிவந்துள்ள திலினி பிரியமாலியை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதிபதி பாசன் அமரசேன நேற்று (02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
பிடியாணை உத்தரவு
சந்தேகநபருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர் இல்லாமல் 192-வது பிரிவின் கீழ் வழக்கை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரின் பிணைதாரர்கள் மறுநாள் முன்னிலையாகுமாறு நீதிபதி அறிவிப்புகளையும் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, வழக்கின் விசாரணை நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் திட்ட முதலீட்டிற்காக குறித்த பெண் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், அரசாங்கத்தின்பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களிடம் இருந்து பல கோடி ரூபாவிற்கும் அதிகமாக நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய திலினி பிரியமாலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS..