கனடாவின் நிதித்துறையில் அதிகரித்து வரும் பணமோசடி முறைப்பாடுகள் -எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கனடாவின் நிதித்துறையில் அதிகரித்து வரும் பணமோசடிப் முறைப்பாடுகளை தொடர்ந்து, சர்வதேச நிதிக் குற்றத்தடுப்பு அமைப்பான Financial Action Task Force அந்த நாட்டில் நேரடி கணக்காய்வுகளை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் டிடி வங்கிக்கு (TD Bank) விதிக்கப்பட்ட சாதனை அளவிலான 3 பில்லியன் டொலர் அபராதம் மற்றும் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கு ஆகியவற்றின் பின்னணியில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அரசின் பொருளாதாரம்
இலங்கை, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இந்தக் குழு, கனடாவின் 13 அரச நிறுவனங்கள் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உட்புறக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

கனடாவில் ஆண்டுதோறும் சுமார் 113 பில்லியன் டொலர் கறுப்புப் பணம் சட்டவிரோதமாக வெள்ளையாக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான கணக்காய்வு முடிவு 2026-ம் ஆண்டு வெளியாகும்.
இது எதிர்மறையாக அமையும் பட்சத்தில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசின் பொருளாதார நற்பெயருக்கும், சர்வதேச முதலீடுகளுக்கும் பெரும் சவாலாக அமையும் என பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan