கனடாவில் முதியவர்களை ஏமாற்றி பெருந்தொகை பணம் மோசடி! - தமிழ் இளைஞர் உள்ளிட்டவர்கள் கைது
கனடாவில் முதியவர்கள் பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொராண்டோ பொலிஸார் இதனை கூறியுள்ளனர்.
கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள தாத்தா பாட்டிகளை குறிவைத்து, மோசடி பண மோசடி செய்தவர்கள் $1.1 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2021 முதல், மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுமார் 100 புகார்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த மோசடியில் இருந்து பெறப்பட்ட மொத்த பணம் $1.1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் டொரோண்டோவை சேர்ந்த 22 வயதான அயிந்தன் ஸ்ரீ ரஞ்சன் என்ற தமிழ் இளைஞரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாவும், இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் முன்வந்து தகவல் வழங்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan