பணமோசடி சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை
சட்டவிரோத நிதி நிறுவனங்கள் உட்பட பணமோசடி சம்பவங்கள் தொடர்பாக கிடைத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குறித்து பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரமிட் திட்டங்கள், சட்டவிரோத கடன் திட்டங்கள் மற்றும் தனிநபர்களை ஏமாற்றி பணமோசடி செய்தல் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூடுதலாக, போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 40 பேரின் சொத்துக்கள் குறித்தும் மேலும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கைகள்
சட்டவிரோத வழிகளில் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த சொத்தை தடை செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

விஜய் ரசிகர்களை பற்றி சிவகார்த்திகேயன் பதில்! சுதா கொங்கரா பேச்சு சர்ச்சையான பின் விளக்கம் Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan