சிம் கார்ட் ஊடாக பல மில்லியன் ரூபாய் மோசடி
பிறரது தொலைபேசி சிம் கார்டுகளை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாய் மோசடி
செய்த சந்தேகநபரை ஜூலை 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான ஹட்டனைச் சேர்ந்த மொஹான் தயாளன், குற்றப் புலனாய்வு பிரிவின் சைபர் குற்றவியல் கண்காணிப்பு பிரிவினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மோசடி
பாதிக்கப்பட்டவர்களின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி அவர்களின் வங்கிக் கணக்குகளில் சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரால் மோசடி செய்யப்பட்ட உண்மையான தொகையை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதவான் திலின கமகே, விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூலை 4ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்காக சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, ஏ.ஏ.எல் ஜயரத்ன ராஜா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.





விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
