வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட ஆயிரக்கணக்கான பணம்! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
கடந்த பெரும் போகத்தில் உரக் கொள்வனவுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தில் 5 சதவீதம் விவசாயிகளே எம்.ஓ.பி உரங்களை கொள்வனவு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
2022/23 பெரும் போகத்தில் எம்.ஓ.பி உரங்களை கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்கியது.
எம்.ஓ.பி உரங்கள் கொள்முதல்
இதனடிப்படையில் ஒரு ஹெக்டேருக்கு 10,000 ரூபா, 2 ஹெக்டேருக்கு 20,000 ரூபா என கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் விவசாயிகளின் கணக்குகளிலேயே குறித்த தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட பணத்தில் 5 சதவீதம் விவசாயிகள் மாத்திரமே எம்.ஓ.பி உரங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
விவசாய அமைச்சு 36,000 மெட்ரிக் தொன் எம்ஓபி உரத்தை இறக்குமதி செய்த போதிலும், மொத்த தொகையில் 5 முதல் 9 வீதத்தையே விவசாயிகள் கொள்வனவு செய்துள்ளதாக அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவர்கள் உண்மைகளை முன்வைத்துள்ளனர்.