உயர்தர தொழிற்கல்விப் பிரிவு மாணவர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப் பிரிவின்(NVQ) கீழ் உள்ள பாடசாலைகளில் 12 ஆம் தர மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சையின் சித்திபெற்ற, சித்திபெறாத நிலையை தொழிற்கல்விப் பிரிவிற்கு 12 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும்போது கருத்தில் கொள்ளப்படாது என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள்
இதன்படி https://moe.gov.lk/2025/05/37984/ என்ற இணைப்பிற்குச் சென்று விண்ணப்பங்களைப் பெறலாம் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் முதல் 608 பாடசாலைகளில் தொழிற் பாடத்துறை பிரிவு செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பாடப்பிரிவில் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள், தாங்கள் எதிர்பார்க்கும் பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
